செங்காட்டூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED :4 hours ago
செய்யூர்; செங்காட்டூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடந்தது.
செய்யூர் அடுத்த செங்காட்டூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்து, கடந்தாண்டு திருப்பணி மேற்கொண்டனர். திருப்பணி முடிந்து நேற்று கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. கணபதி பூஜை, கோ பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் இன்று காலை 9:30 மணிக்கு நடந்தது. விமான கலசம் மற்றும் மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.