நாக வாகனத்தில் காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் வீதி உலா
ADDED :4 hours ago
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில், ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோத்சவ பெருவிழா ஜூன் 17 ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 13 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார். விழாவின் நான்காவது நாளான இன்று காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர், மருகுவார்குழலியுடன், நாக வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவரை வழிபட சனியின் தாக்கம் நீங்கும், பதவி உயர்வு கிட்டும் என்பது நம்பிக்கை.