உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா துவக்கம்

முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா துவக்கம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இக்கோயிலின் ஆனித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9:30 மணிக்கு உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து ரிஷபக் கொடியை பல்லக்கில் வைத்து கோயிலை வலம் வந்தனர். காலை 10:30 மணிக்கு கோயில் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். இரவு 8:30 மணிக்கு மீனாட்சி சொக்கநாதர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு காப்பு கட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. 10 நாள் திருவிழாவாக ஒவ்வொரு நாளும் பகல் இரவு நேரங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. ஜூன் 25 ல் கழுவன் விரட்டும், ஜூன் 26 ல் மீனாட்சி பட்டாபிஷேகம் நடக்கிறது. ஜூன் 27ல் மீனாட்சி திருக்கல்யாணமும், 28 ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை முறையூர் கிராமத்தார்கள் சிவகங்கை தேவஸ்தானம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !