காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் விமரிசை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில், ஆனி உத்திர பிரம்மோத்சவத்தின் ஏழாம் நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது.
காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோத்சவ பெருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், தினமும் காலை, 8:00 மணிக்கும், இரவு 7:30 மணிக்கும், மருகுவார் குழலி அம்பிகையுடன், மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் வழக்கறுத்தீஸ்வரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருகிறார்.
இதில், ஏழாம் நாள் உத்சவமான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில், மருகுவார்குழலியுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய வழக்கறுத்தீஸ்வரர் காந்தி சாலை, வள்ளல் பச்சையப்பன் தெரு, காமராஜர் வீதி மற்றும் நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.