பழநி உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவிலில் வருடாபிஷேகம்
ADDED :2 hours ago
பழநி; பழநி, உஜ்ஜயினி மாகாளியம்மன், கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோயில்களில் வருடாபிஷேகம் நடந்தது.
பழநி கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோயில், வருடாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. அதன் பின் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.