பூவரசன்குப்பம் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4 hours ago
விழுப்புரம்: பூவரசன்குப்பம் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் அருகே பூவரசன்குப்பத்தில் உள்ள செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில், திருப்பணிகள் பணி முடிந்து கும்பாபிஷேக விழா கடந்த 21ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கோபூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 22ம் தேதி நவக்கிரஹ ஹோமம், முதல் கால யாகபூஜையும், 23ம் தேதி இரண்டாம் கால பூஜை, தீபாரதனையும், மாலை மூன்றாம் காலபூஜை நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாகபூஜையும், நாடி சந்தானம், மஹா பூர்ணாஹூதி, கலச புறப்பாடும் நடந்தது. காலை 9:30 மணிக்கு கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து செங்கழுநீர் மாரியம்மனுக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.