திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோத்சவம் தொடக்கம்
திருமழிசை: திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில், ஆனி பிரம்மோத்சவ திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் அமைந்துள்ளது ஜெகந்நாத பெருமாள் கோவில். இங்கு, இந்த ஆண்டு ஆனி பிரம்மோத்சவ திருவிழா, நேற்று காலை 8:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, சுவாமி தங்கதோளுக்கினியன் வாகனத்தில், திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், மாலையில் சிம்ம வாகனத்தில் சுவாமி திருவீதியுலா வந்தார். பிரம்மோத்சவ திருநாளில், தினமும் காலை, மாலை வேளைகளில், பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை, நாளை 27ம் தேதி காலையிலும், தேர்த்திருவிழா வரும் ஜூலை 1ம் தேதி காலையிலும் நடைபெறும். வரும் ஜூலை 3ம் தேதி மாலை, கொடியிறக்கத்துடன் ஆனி பிரம்மோத்சவ திருவிழா நிறைவு பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.