தர்மநல்லுார் தருமபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :5 hours ago
சேத்தியாத்தோப்பு: தர்மநல்லுார் தருமபுரீஸ்வரர், தர்மசம்வர்த்தினி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
சேத்தியாத்தோப்பு அடுத்த தர்மநல்லுார் கிராமத்தில் தர்சம்வர்த்தினி சமேத தருமபுரீஸ்வரர் கோவிலில் நேற்று திருக்கல்யாண உற்சவ விழா வில் ஏராளமானோர் பங் கேற்று வழிபாடு செய்தனர். தருமபுரீஸ்வரர், தர்மசம்வர்த்தினி உற்சவர்களுக்கு பால்,சந்தனம், பன்னீர், இளநீர், பன்னீர், திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிேஷகம் நடந்தது. ஃஉற்சவர்களுக்கு ஆடை, மலர் அலங்காரம் செய்து திருமண மேடையில் அமர வைத்து சிறப்பு ஹோமங்கள் செய்து தருமபுரீஸ்வரர், தர்மசம்வர்த்தினி அம்மனுக்கு தாலிக்கட்டு திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது. விழாவில் தர்மநல்லுார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராள மானோர் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்றனர்.