ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயிலில் ஆனி திருக்கல்யாணம்
ADDED :42 minutes ago
ராஜபாளையம்: ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயிலில் ஆனிப் பெருந்திருவிழாவில் நேற்று மாலை திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இக்கோயிலில் ஜூன் 20-ல் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. நேற்று மாலை 6:30 மணிக்கு பக்தர்கள் சார்பில் சீர் கொண்டு வரப்பட்டு திருக்கல்யாணம் அன்னதானம் நடந்தது. சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 10:00 மணிக்கு நடராஜர் புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.