மயிலம் பகுதி கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு
மயிலம்: மயிலம் பகுதி கோவில்களில் நேற்று சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.
மயிலம் அடுத்த கொல்லியங்குணம் சிவன் கோவிலில் நேற்று மாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள நந்திக்கு நடந்த மகா தீபாராதனை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதுபோன்று மயிலம் சுந்தர விநாயகர் கோவிலிலும் ரெட்டணை, பெரும்பாக்கம், நெடி, பாதிராப்புலியூர், தென்பசியார், செண்டூர், ஆலகிராமம் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
விழுப்புரம் விழுப்புரம் பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை 4:30 மணிக்கு மூலவர் மற்றும் நந்திபெருமானுக்கு பிரதோஷ கால பூஜை நடந்தது. தொடர்ந்து, பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், குங்குமம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் ரிஷப வாகனத்தில் உட்பிரகார உலா நடந்தது.
விழுப்புரம், சாலை அகரம் அக்னிபுரீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை நந்தி பகவானுக்கும், மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.
கண்டாச்சிபுரம் கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை 6:00 மணியளவில் நந்தி பகவானுக்கும் பிரதோஷ மூர்த்தி சுவாமிகளுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பிரதோஷ மூர்த்தி சுவாமிகள் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கண்டாச்சிபுரம், மடவிளாகம், வீரங்கிபுரம், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.