உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் நடந்த சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கடலுார், திருப்பாதிரிப்புலியூரில், பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று சனிப்பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. காலை பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

மாலையில் நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பாடலீஸ்வரருக்கும், நந்தி பகவானுக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

சிறப்பு அலங்காரத்தில் பிரதோஷ நாயகர் உள் புறப்பாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !