உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரான்சில் மலரும் திருப்பதி கோவில் பணிகளில் மைல்கல்

பிரான்சில் மலரும் திருப்பதி கோவில் பணிகளில் மைல்கல்

பிரான்ஸ் நாட்டிற்கும் புதுச்சேரிக்கு நெருங்கிய தொப்புள் கொடி உறவு உள்ளது. புதுச்சேரியில் இருந்து ஏராளமானோர் பிரான்சில் வசிக்கின்றனர். அவர்கள், இன்னும் இந்து மதத்தை தான் பின்பற்றுகின்றனர்.

பிரான்சில் வாழும் இந்து சமூகத்தினரின் நீண்ட நாள் கனவான, வெங்கடேஸ்வரப் பெருமாளுக்கென கோவில் அமைக்கும் பணி இருக்கிறது. இதற்காக பல்வேறு முயற்சி எடுத்து வந்தனர். அந்த பணி செயல் வடிவம் பெறாமல் இருக்கிறது. தற்போது ஒரு முக்கிய முன்னேற்றத்தை எட்டியுள்ளது.

கோவி ல் அமைப்பதற்குத் தகுந்த நிலத்தைத் தேர்வு செய்வது தொடர்பாக பிரான்சின் போண்டி நகர மேயரை, கோவில் அமைப்பின் (எஸ்.வி.டி.எப்.,) தலைவர் கண்ணபிரான் தலைமையில், அருண் பார்த்தசாரதி, ரமஷே், கவுதமன், உதய ராஜ் மற்றும் அருணன் உள்ளிட்ட குழுவினர் சந்தித்து பேசினர்.

கோவில் கட்டுமானத் திட்டங்கள் குறித்து விவரித்தனர். குறிப்பாக பிரான்சில் அமையவிருக்கும் ஸ்ரீ வேங்கடேஸ்வரப் பெருமாள் கோவிலின் தொலைநோக்குப் பார்வை, அதன் ஆன்மீகச் சிறப்புகள் மற்றும் அது சமூகத்திற்கு ஆற்றவிருக்கும் பணிகள் குறித்து மேயரிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

பிரான்சில் வசிக்கும் இந்து சமூகத்தின் ஆன்மிக அடையாளமாக அமையவிருக்கும் இந்த கோவில், வெறும் வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல், தமிழ், புதுச்சேரி கலாசாரத்தை போற்றும் மையமாகவும் திகழும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !