பரமக்குடி சிவன் கோயில்களில் சனி பிரதோஷ விழா
பரமக்குடி: பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் நேற்று மாலை 4:30 மணிக்கு சன்னதி நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
வெள்ளிக்கவசம் சாற்றப் பட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதேபோல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயில், நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில், மேலப்பெருங்கரை அட்டாள சொக்கநாதர் கோயில் ஆகிய இடங்களில் பிரதோஷ விழாவில் பக் தர்கள் பங்கேற்றனர்.
சாயல்குடி அருகே மாரியூர் சிவன் கோயில், ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில் நந்தி பகவானுக்கு அபி ஷேகம் அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது.
* திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், நம்புதாளை நம்பு ஈஸ்வரர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ் வரர் மற்றும் கிராமங்களில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.
சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க திரவியங்களால் அபிஷேகம் நடந்தது, பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மானாமதுரை: சிவன் கோயில்களில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்செய்தனர்.
மானாமதுரை பட்டத்தரசி ராம் நகரில் உள்ள நாகநாதர் கோயிலில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை பூஜை நடைபெற்றது.
ஆனந்தவல்லி-சோம நாதர் கோயிலில் மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. வெள்ளி உற்ஸவர் சோம நாதர் சுவாமி மற்றும் ஆனந்தவல்லி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வலம் வந்தனர். இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர், சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயிலில் நடந்த பிரதோஷ விழாவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது.
88833பரமக்குடி சிவன் கோயில்களில் சனி பிரதோஷ விழா