உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல்: கோயில்களில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு

திண்டுக்கல்: கோயில்களில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு

திண்டுக்கல்: ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், பழநி ரோடு காளியம்மன் கோயில், ஆர்.எம்., காலனி வெக்காளியம்மன், குபேரலிங்கேஸ்வரர் உள்ளிட்ட கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஓம்கார விநாயகர், ஓம்கார நந்தி, வாலை சக்தி அம்மன், போகர், முத்தானந்தர், வாலையானந்தர், குண்டலினி சித்தர்களுக்கு சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.

தெத்துப் பட்டி ராஜகாளியம்மன் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

வேடசந்துார்: குட்டம் கருமலை அடிவாரம் ஆதிகோரக்கநாதர் மவுனகுரு சித்தர் பத்மகிரி பாபா சமஸ்தானத்தில் சிறப்பு யாகம் நடந்தது.

தொடர்ந்து விநாயகர், கருப்பணசாமி, கன்னிமார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைநடந்தது.

பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி வழிபட்டனர். யாக பூஜையில் மகாலட்சுமி அலங்காரத்தில் அம்மன் காட்சி தந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப் பட்டது.

இதுபோல் அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், குட்டத்துப்பட்டி பிச்சை சித்தர் கோயில், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பவுர்ணமி சிறப்பு வழிபாடுகள், திருவிளக்கு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !