அலகுமலை ஸ்ரீ அகஸ்தியர் ஆயுர்வேத ஆசிரமத்தில் மஹா சண்டி யாகம்
ADDED :17 hours ago
பொங்கலுார்: அலகுமலை ஸ்ரீ அகஸ்தியர் ஆயுர்வேத ஆசிரமத்தில் உள்ள மரகதலிங்கத்திற்கு ஸ்ரீ மஹா சண்டியாகத் திருவிழா நடைபெற்றது.
நேற்று நவாவரண பூஜை, துர்கா சப்தசதியாகம், 13 அத்தியாய ஹோமம், பிரம்மச்சாரி, வடுக, கன்யா, சுமங்கலி மற்றும் தம்பதி பூஜைகளுடன், மாலை பவுர்ணமி சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது. விழாவை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் அர்ச்சகர் பாபு சிவாச்சாரியார், ராஜகணபதி சிவம் உள்ளிட்டோர் நடத்தி வைத்தனர்.