உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போடி கோயிலில் கந்த சஷ்டி விழா; பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கம்

போடி கோயிலில் கந்த சஷ்டி விழா; பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கம்

போடி: போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கொடி யேற்றத்துடன் இன்று துவங்கியது. போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். தங்க கவச அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராத னைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் தரிசனம் பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்து இருந்தார். சஷ்டி விரதம் துவங்கும் வகையில் பக்தர்களுக்கு காப்பு கட்டப் பட்டது. குறிப்பாக பெண்கள் காப்பு கட்டி விரதத்தை துவங்கினார்கள். கந்த சஷ்டி திருவிழாவை ஒட்டி முருகனுக்கு தினமும் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடக்கிறது. நவ. 15ல் மாலையில் சுவாமி நகர்வலம், சூரசம்ஹாரமும், நவ.16ல் காலையில் சுப்பிரமணியர் திருக்கல்யாணம் நடக்கிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !