ஆண்டிபட்டி ஆஞ்சநேயர் கோயிலில் அமாவாசை விழா
ADDED :11 minutes ago
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மேற்கு ஓடைத்தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் ஐப்பசி அமாவாசை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உட்பட 21 வகையான அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் மலர் அலங்காரம் செய்தனர். ஆண்டிபட்டி மற்றும் சுற்று கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.