கேதார கௌரி விரதம்: திருத்துறைப்பூண்டி ஸ்ரீராமர் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :12 minutes ago
திருவாரூர், : திருத்துறைப்பூண்டியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீராமர் கோவிலில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னிட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ராமபிரானுக்கு திருமஞ்சனமும், தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கேதார கௌரி விரதம் பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியை வழிபட்டனர்.