உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூரி ஜெகந்நாதர் கோயிலில் மங்கள ஆரத்தி தரிசனம்: அதிகாலையிலேயே குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

பூரி ஜெகந்நாதர் கோயிலில் மங்கள ஆரத்தி தரிசனம்: அதிகாலையிலேயே குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

பூரி: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலில், இன்று அதிகாலை நடைபெற்ற மங்கள ஆரத்தியில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஆன்மிக பக்தி நிறைந்த சூழலில் ஜெகந்நாதருக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. பக்தர்களின் பஜனை மற்றும் கீர்த்தனைப் பாடல்கள் கோயில் முழுவதும் பக்தி பரவசத்தை ஏற்படுத்தின. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள் அதிகாலையிலேயே கோயிலில் திரண்டு, ஜெகந்நாதரின் திருவருளைப் பெற்று மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !