உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீபாவளி பண்டிகையில் கோயில்களில் வழிபாடு

தீபாவளி பண்டிகையில் கோயில்களில் வழிபாடு

ராமநாதபுரம்: 


தீபாவளியை முன்னிட்டு ராமநாதபுரம் நகர், புறநகரில் உள்ள விநாயகர், முருகன், பெருமாள், அம்மன் கோயிலில் அபிஷேகம், பூஜைகள் நடந்தன. புத்தாடை அணிந்து பக்தர்கள் பலர் தரிசனம் செய்தனர்.


ராமநாதபுரம் அரண்மனை பின் பகுதியில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் தீபாவளியை முன்னிட்டு சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. இதே போல கோதண்ட ராமர் கோயில், குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில், பஸ் ஸ்டாண்ட் அருகே வழிவிடு முருகன் கோயில், சந்தைக்கடை ரோடு வல்லபை விநாயகர் கோயில், ரயில்வே பீடர் ரோடு வெட்டுடையாள் காளியம்மன், சேதுபதிநகர் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள வினைதீர்க்கும் வேலவர் கோயில், மல்லம்மாள் காளியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அபிஷேக வழிபாடு நடந்தது.

புத்தாடை அணிந்து பக்தர்கள் பலர் தரிசனம் செய்தனர். ராமநாதபுரம் வசந்த நகரில் உள்ள ஹரே கிருஷ்ணா கோயிலில் மாலையில் தீபங்கள் ஏற்றி தீப உற்ஸவ விழாவாக தீபாவளி சிறப்பு பூஜைகள் நடந்தது.

தேனி: 


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.


வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம, பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில், மதுரை ரோடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், என்.ஆர்.டி., நகர் சிவ கணேச கந்த பெருமாள் கோயில், அல்லிநகரம் வரதராஜபெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தன. பல்வேறு அலங்காரங்களில் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் புத்தாடைகள் அணிந்து குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்னதர்.

போடி: 


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தங்க கவச அலங்காரத்தில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாளம் தரிசனம் பெற்றனர். அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.


போடி பிச்சாங்கரை மலையில் உள்ள மேலச் சொக்க நாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், திருமலாபுரம் முத்து மாரியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளி யம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

பழநி: 


பழநி கோயில்களில் தீபாவளியை முன்னிட்டு அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பழநி முருகன் கோயில், திரு ஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில் அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டு தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பழநி சண்முகபுரம் சித்தி விநாயகர் கோயிலில் ரூ.10, ரூ.20 ரூபாய் நோட்டுகளால் விநாயகர் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் பூஜையில் பங்கேற்று, சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.


உடுமலை: 


உடுமலை சுற்றுப்பகுதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி, கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


அதிகாலை முதல் கோவில்களில் பல்வேறு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஒருங்கே அருள்பாலிக்கும் திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜைகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதே போல், உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவில் உட்பட சுற்றுப்பகுதி கோவில்களிலும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !