உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை ரங்கநாதர் கோவிலில் தீபாவளி சிறப்பு பூஜை

காரமடை ரங்கநாதர் கோவிலில் தீபாவளி சிறப்பு பூஜை

காரமடை: தீபாவளி  வைபவத்தை ஒட்டி பிரசித்தி பெற்ற காரமடை  அரங்கநாத சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. காலையில் நடை திறக்கப்பட்டு மூலவர் ஸ்ரீ ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் இதில் நெய் தேன் பால் தயிர் இளநீர் மஞ்சள் சந்தனம் கனி வர்க்கம்  உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கால சந்தி பூஜை உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு திருவாராதனம் சாற்றுமுறை சேவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இந்த வைபவத்தில் ஸ்தலத்தார்கள் அர்ச்சகர்கள் திருக்கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து இரவு ராக்கால பூஜை முடிந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் வெள்ளிச் சப்பரத்தில் பெல்பட்டு குடை சூழ மேல தாளம் முழங்க நான்கு ரத வீதிகளில் வலம் வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !