கோவை கோயில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடு: குடும்ப சகிதமாக குவிந்த பக்தர்கள்
ADDED :13 minutes ago
கோவை: தீபாவளி பண்டிகையை ஒட்டி ராம் நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சுவாமிக்கு நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வழிபாடுகளும் நடந்தன. சிறப்பு மலர் அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
பீளமேடு, அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோயில் சுவாமி முத்தங்கி சேவை அலங்காரத்திலும், முந்தி விநாயகர் வெள்ளிகவசம் அணிவித்து பட்டு அங்கவஸ்திரம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்திலும், ஈச்சனாரி விநாயகர் அருகம்புல் உள்ளிட்ட பல வண்ண மலர் அலங்காரத்திலும் அருள்பாலித்தனர்.
ஈச்சனாரி மகாலட்சுமி மந்திர் முப்பெரும் தேவியர், சிறப்பு அலங்காரத்தில் காட்சியருளினர். திரளான பக்தர்கள் குடும்பம் சகிதமாக வழிபட்டனர்.