உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களில் தீபாவளி சிறப்பு பூஜை: ஏராளமானோர் சுவாமி தரிசனம்

கோயில்களில் தீபாவளி சிறப்பு பூஜை: ஏராளமானோர் சுவாமி தரிசனம்

தேவகோட்டை: தேவகோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், புவனேஸ்வரி அம்மன் கோயில், காமாட்சி அம்மன் கோயில், நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில், சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில், காமாட்சி அம்மன் கோயில், பிருத்தியங்கிராதேவி கோயில், அழகாபுரி நகர் காளியம்மன் கோவில், சுந்தர விநாயகர் கோயில், பாலமுருகன் கோயில், சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் வழக்கமான நேரத்தை விட தீபாவளியை ஒட்டி அதிகாலை ஐந்து மணிக்கே அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து சுவாமி கள், அம்பாளுக்கு தீபாவளி புது பட்டு ஆடைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமானோர் புத்தாடை அணிந்து கோயில்களுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !