உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிமூர்த்தி பெருமாள் கோயிலில் சிறப்பு பஜனை: பக்தர்கள் பக்தி பரவசம்

ஆதிமூர்த்தி பெருமாள் கோயிலில் சிறப்பு பஜனை: பக்தர்கள் பக்தி பரவசம்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பழைய புதூர் கிராமத்தில் உள்ள ஆதிமூர்த்தி பெருமாள் கோயிலில் தீபாவளி பண்டிகையொட்டி சிறப்பு பஜனை, திருவீதி உலா நடந்தது.


பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பழைய புதூர் கிராமத்தில் பழங்கால ஆதிமூர்த்தி பெருமாள் கோயில் உள்ளது. இங்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி நேற்று அதிகாலை திருமஞ்சனம், சிறப்பு பூஜை நடந்தது. பூதேவி, ஸ்ரீதேவி தாயார்களுடன் ஆதிமூர்த்தி பெருமாள், சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உற்சவமூர்த்தியின் திருவீதி உலா கோயில் வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், பஜனை கோஷ்டியினர் பங்கேற்று, இறை பாடல்களை பாடி கோயிலை சுற்றி வலம் வந்தனர். அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !