தீபாவளி வழிபாடு: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திரண்ட பக்தர்கள்
ADDED :12 minutes ago
மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி, ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை, 5:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதிகாலை 6:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள், குடும்பத்துடன் வந்து நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மலைப்பாதையில், இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.