உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தியில் தீப உற்சவம்; சரயு நதிக்கரையில் 30 லட்சம் விளக்குகள் ஏற்றி சாதனை

அயோத்தியில் தீப உற்சவம்; சரயு நதிக்கரையில் 30 லட்சம் விளக்குகள் ஏற்றி சாதனை

அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். ராமாயணத்தின்படி, தீபாவளிக்கு முந்தைய நாள், கடவுள் ராமர் வனவாசம் முடிந்து நாடு திரும்பிய நிகழ்வை கொண்டாடும் விதமாக இந்த தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது.


10வது தீப உற்சவம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முதல்வர் யோகி ஆதித்யநாத், சரயு நதிக்கரையில் தீப ஆராதனை செய்து வழிபாடு நடத்தினார். முக்கிய நிகழ்வாக, சரயு நதிக்கரையில் 30 லட்சம் விளக்குகள் ஏற்பட்டன. தன்னார்வலர்கள், பக்தர்கள், பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு 25 லட்சம் விளக்குகள் ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 5 லட்சம் விளக்குகள் ஏற்றி, சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீபத்திருவிழாவால் அயோத்தி நகரம் முழுவதும் விளக்கு ஒளியில் ஜொலிக்கின்றன.


லேசர் லைட்டுகள், டிரோன்களின் மூலம் ராமாயண வரலாறுகள் காட்சிப்படுத்தப்பட்டன. இது பார்ப்போரை பரவசமடையச் செய்தது. இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், உத்தரபிரதேச கவர்னர் அனந்திபென் படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !