அயோத்தியில் தீபத்திருவிழா: ஜொலிக்கும் சரயு நதிக்கரை
ADDED :13 minutes ago
உத்திரப் பிரதேசம் அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் ஆண்டு தோறும் தீபாவளியை முன்னிட்டு லட்சக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்வது வழக்கம்,இந்த ஆண்டு நேற்று இரவு ஏற்றப்பட்ட விளக்குகள் ஜொலிக்கின்றன.
10-வது தீப உற்சவத்திற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ராம் கி பைடி (Ram Ki Paidi) பகுதியில், தன்னார்வலர்கள் மண் அகல் விளக்குகளில் திரிகளை இடும் பணியைத் தொடங்கியுள்ளனர். ஒட்டுமொத்த நகரையும் ஒளிரச் செய்ய 30 லட்சம் மண் அகல் விளக்குகள் ஏற்றப்படவுள்ளன.