உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துணை ஜனாதிபதி இல்லத்தில் பிரதமர் மோடி வழிபாடு: இருவரும் பரஸ்பர தீபாவளி வாழ்த்து

துணை ஜனாதிபதி இல்லத்தில் பிரதமர் மோடி வழிபாடு: இருவரும் பரஸ்பர தீபாவளி வாழ்த்து

புதுடில்லி:  நாடு முழுதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இல்லத்துக்கு இன்று பிரதமர் மோடி சென்று இருந்தார்.  அவரை பூங்கொத்து கொடுத்து சிபிஆர் உற்சாகமாக வரவேற்றார்.  நடராஜர் சிலை போட்டோவை பிரதமருக்கு பரிசாக வழங்கினார்.  இருவரும் தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.


துணை ஜனாதிபதி இல்லத்தில் பூஜை செய்து வழிபாடு பிரதமர் மோடி நடத்தினார். அப்போது, பிரதமர் மோடிக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் திலகமிட்டார்.


இது தொடர்பாக பிரதமர் மோடி விடுத்த எக்ஸ் தளப்பதிவில்;  துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து, தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டோம், எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !