உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் அமாவாசை வழிபாடு

சதுரகிரியில் அமாவாசை வழிபாடு

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை வழிபாட்டில்
பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நேற்று காலை 6:00 மணிக்கு தாணிப்பாறை வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். காலை 12:00 மணி வரை குறைவான பக்தர்களே மலை ஏறினர்.

கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்திரமகாலிங்கம் சுவாமிகளுக்கு அமாவாசை வழிபாடு பூஜைகளை பூசாரிகள் செய்தனர். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது. வத்திராயிருப்பு போலீஸ் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !