ஆண்டாள் கோயிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு
ADDED :13 minutes ago
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் தீபாவளியை முன்னிட்டு நேற்று நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனை முன்னிட்டு நேற்று மாலை 5:00 மணிக்கு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார், கருடாழ்வார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆழ்வார்கள் எழுந்தருளினர்.
அவர்களுக்கு புத்தாடை சாற்றி சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.