/
கோயில்கள் செய்திகள் / ஸ்ரீநகரின் புகழ்பெற்ற லால் சவுக்கில் ஆயிரக்கணக்கான தீபங்கள் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்!
ஸ்ரீநகரின் புகழ்பெற்ற லால் சவுக்கில் ஆயிரக்கணக்கான தீபங்கள் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்!
ADDED :14 minutes ago
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற லால் சவுக் பகுதியில் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
அங்குள்ள பிரசித்தி பெற்ற கடிகாரக் கோபுரமான ‘கண்டா கர்’ பகுதியில், நவம்பர் 8-ம் தேதி மாலை உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் ஒன்றுகூடி ஆயிரக்கணக்கான மண் அகல் விளக்குகளை ஏற்றினர். இதனால், ஸ்ரீநகரின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான லால் சவுக் பகுதி முழுவதும் தீப ஒளியில் ஜொலித்தது. இந்தக் கண்கவர் தீபாவளிக் கொண்டாட்டம் அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.