உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் திரௌபதி அம்மன் கோவிலில் திரண்ட பக்தர்கள்

நெல்லிக்குப்பம் திரௌபதி அம்மன் கோவிலில் திரண்ட பக்தர்கள்

நெல்லிக்குப்பம்: இந்து மக்கள் தீபாவளியன்று கேதாரீஸ்வரர் நோன்பு இருந்து புது பானையில் தாங்கள் தயாரித்த அதிரசம் போன்ற உணவுப் பொருட்கள் மற்றும் பூஜை பொருட்களை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு சென்று நோன்பு வழிபடுவது வழக்கம். அதேபோல் தீபாவளி அன்றோ மறுநாளோ வரும் அமாவாசை தினத்திலும் நோன்பு எடுப்பது வழக்கம். நேற்று  தீபாவளி மற்றும் அமாவாசை பண்டிகைகள் ஒரே நாளில் வந்தன. இதனால் மக்கள் காலையில் தீபாவளி நோன்பான கேதாரீஸ்வரர் நோன்பெடுக்கவும் மதியம் அமாவாசை நோன்பை எடுக்கவும் நெல்லிக்குப்பம் திரௌபதி அம்மன் கோவிலில் ஒரே சமயத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வழிபட்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !