உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி திருவிழா: கோயிலில் இடம் பிடிக்க பக்தர்கள் போட்டி

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி திருவிழா: கோயிலில் இடம் பிடிக்க பக்தர்கள் போட்டி

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் நாளை (நவ. 10) காலை 7:00 மணிக்கு துவங்குகிறது.


அனுக்ஞை பூஜை, யாகசாலை பூஜை முடிந்து ஆறுமுகம் கொண்ட சண்முகர் வள்ளி தெய்வானை, பிறமணிய சுவாமி தெய்வானைக்கு சிவாச்சாரியார்களால் காப்பு கட்டப்படும். திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டிய பின்பு காலை 9:00 மணிக்கு மேல் விரதம் மேற்கொள் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படும். திருவிழா நடைபெறும் நாட்களில் கோயில் மண்டபங்களில் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் தங்கி விரதம் மேற்கொள்வர். இன்று முதல் கோயில் மண்டபங்களில் சஷ்டி பக்தர்கள் தங்குவதற்கு கோயில் நிர்வாகம் அனுமதித்தது. பாதுகாப்பு கருதி தீபாவளி அன்று இரவு பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அப்படி இருந்தும் தீபாவளி அன்று காலை முதல் கோயில் மண்டபங்களில் பக்தர்கள் போர்வை விரித்தும், சாக்பீஸ்களால் தங்களது பெயர், ஊரின் பெயர் எழுதி இடம் பிடிக்க துவங்கினர். இன்று அதிகாலையிலேயே சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் கோயில் மண்டபங்களில் தங்க வந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !