கிருஷ்ணன் கோயிலில் 4 ம் ஆண்டு வருஷாபிஷேக விழா
ADDED :4 hours ago
ராஜபாளையம்: ராஜபாளையம் தென்றல் நகர் மெயின் ரோடு சாஸ்திரி நகர் குடியிருப்பில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோயில் 4 ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு பூஜை ஹோமங்கள் தொடங்கின. விஷ்வக்சேனர், மகா சுதர்சனர், கிருஷ்ணசுவாமி, மகாலட்சுமி, ஆர்ண்டாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அனைத்து தெய்வங்களுக்கும் மூல மந்திர ஹோமங்களுடன் அலங்காரங்கள் முடிந்து மகா தீபாராதனை நடந்தது. மாலை 5:30 மணிக்கு விளக்கு பூஜை நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.