ராஜபாளையம் கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :9 hours ago
ராஜபாளையம்: ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று கணபதி ஹோமம், பூர்ணா ஹுதி தீபாராதனை, முதல் கால யாக சாலை பூஜைகளை தொடர்ந்து இன்று காலை 9:00 மணிக்கு வேதபாராயினும் 2ம் கால யாக பூஜைகளுக்கு பின் விநாயகர், சப்த கன்னிமார், பெருமாள், லாட சன்னாசி, கருப்பசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் மகா தீப ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கன்னிமார் கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.