கோயில் விழாவில் எருது ஓட்டம்; பலக்கனூத்தில் பாரம்பரிய விழா
ADDED :33 minutes ago
ரெட்டியார்சத்திரம்: பலக்கனூத்து கோயில் திருவிழாவில், பாரம்பரிய சலகை எருது ஓட்டம் நடந்தது.
பலக்கனூத்து கற்பக விநாயகர், முத்தாலம்மன், மகா காளியம்மன் கோயில் வருடாபிஷேக விழா நடந்தது. சாட்டுதலுடன் துவங்கிய விழாவில், முத்தாலம்மன், மகா காளியம்மன் அழைப்பு, கிராம ஊர்வலம் நடந்தது. ஏராளமான பெண்கள், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். கிராம தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக மாடுகளை அலங்கரித்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. சலகை எருதுகளை ஊர்வலமாக அழைத்துச் சென்று, மரியாதை செய்யும் விழா நடந்தது. தலைப்பாகை அணிந்த இளைஞர்கள், நூற்றுக்கணக்கான மாடுகளை ஒரே இடத்தில் நிறுத்தி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் கோயில் நோக்கி சலகை எருது ஓட்டம், அம்மன் மஞ்சள் நீராடல், கங்கை புறப்பாடு நடந்தது.