உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடைக்காட்டூர் சர்ச்சில் மின் அலங்கார தேர்பவனி, ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.

இடைக்காட்டூர் சர்ச்சில் மின் அலங்கார தேர்பவனி, ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.

மானாமதுரை; இடைக்காட்டூரில் உள்ள திரு இருதய ஆண்டவர் சர்ச் 132ம் ஆண்டு திருவிழாவை யொட்டி நடைபெற்ற மின் அலங்கார தேர் பவனி மற்றும் சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் புகழ் பெற்ற திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் வருடம் தோறும் ஆண்டு விழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது.இந்த ஆண்டிற்கான திருவிழா ஜூன் 26ம் தேதி மாலை 6:00 மணிக்கு நம் வாழ்வு முதன்மை ஆசிரியர் ராஜசேகரன் தலைமையில் துவங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நேற்று நடைபெற்ற திரு இருதய பெருவிழாவில் ஆயர் லூர்து ஆனந்தம், பாதிரியார்கள் ஜேசுதாஸ்,இம்மானுவேல் தாசன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.பின்னர் இயேசுவின் சொரூபம் வைக்கப்பட்டு மின் அலங்காரம் செய்யப்பட்ட தேர் பவனி முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்த பிறகு சர்ச்சை அடைந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஜான் வசந்தகுமார், நம் வாழ்வு துணை ஆசிரியர் பிரின்ஸ் மற்றும் மரியின் ஊழியர் சபை சகோதரிகள், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செல் இளைஞர் பேரவை, திரு இருதய பக்தர்கள் மற்றும் பங்கு இறை மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !