/
கோயில்கள் செய்திகள் / எல்லம்மாள் கோயில் திருவிழா; தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எல்லம்மாள் கோயில் திருவிழா; தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :10 hours ago
கிருஷ்ணகிரி; ஓசூர் அருகே உள்ள பீர்ஜேப்பள்ளியில் நடைபெற்ற குருமூர்த்தி எல்லம்மாள் கோயில் திருவிழாவில், பக்தர்கள் தங்களது தலை மீது தேங்காய் உடைத்தும், சாட்டையடி வாங்கியும் விநோத முறையில் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறவும், குடும்ப நலன் காக்கவும் பூசாரியின் கைகளால் தங்களது தலை மீது தேங்காய் உடைத்து வினோதமான முறையில் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இவ்வாறு நேர்த்திக்கடன் செலுத்துவதால் தீய சக்திகள் விலகி, பில்லி சூனியங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.