உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் நூறு கால் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்தது

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் நூறு கால் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்தது

திருவாலங்காடு; திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் நுாறு கால் மண்டபத்தின் கூரை, நேற்று நள்ளிரவில் இடிந்து விழுந்தது.


திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 25 பசுக்கள் பராமரிக்கப்பட்டு வந்தன. இவற்றுக்கான தீவனமாக, 400க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகள், நுாறு கால் மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. கடந்த மாதம் 25ம் தேதி இரவு, கோவில் வளாகத்தில் சேகரிக்கப்பட்ட குப்பையை எரித்த போது, அதிலிருந்து தீ பரவி, நுாறு கால் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் கட்டுகள் எரிந்து நசமாகின. அப்போது, மண்டபம் முழுதும் சேதமடைந்து, உள்பகுதி கருகி நாசமானது. இந்நிலையில், நேற்று இரவு 12:30 மணிக்கு, நுாறு கால் மண்டபத்தின் கூரை சரிந்து விழுந்தது. அப்போது ஊழியர்கள் யாரும் இல்லாததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த திருத்தணி கோவில் இணை ஆணையர் ரமணி, திருவாலங்காடு கோவிலுக்கு வந்து ஆய்வு செய்தார். அதன்பின், மண்டபத்திற்குள் வெளியாட்கள் யாரும் செல்லாதபடி பூட்டு போடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !