உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்

திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்

கடலுார்: கடலுார், புதுப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.


கடலுார், புதுப்பாளையம் திரவுபதி அம்மன் கோவில் பெருவிழா கடந்த ஜூன், 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை திருமஞ்சனம், மாலை மகாபாரத சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து, 26ம் தேதி திருவிளக்கு பூஜை நடந்தது. கடந்த, 8ம் தேதி மாலை அர்ஜூனன் வில் வளைத்தல், திருக்கல்யாணம் நடந்தது. 9ம் தேதி திருமஞ்சனம், அர்ஜூனன் தபசு, கண்ணபிரான் துாது நிகழ்வு நடந்தது. நேற்று தீமிதி திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மூலவர் மற்றும் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். தொடர்ந்து, சுவாமி வீதியுலா நடந்தது. இன்று மாலை கொடியிறக்கம், மஞ்சள் நீராட்டு உற்சவம், சுவாமி வீதியுலா, இரவு தர்மர் பட்டாபிஷேகம், அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !