உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நங்கநல்லுார் குருவாயூரப்பன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

நங்கநல்லுார் குருவாயூரப்பன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

நங்கநல்லுார்: குருவாயூரப்பன் கோவில் பிரம்மோத்சவத்தின் பிரதான நாளான நேற்று, தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.


சென்னை, நங்கநல்லுாரில் அமைந்துள்ளது உத்திர குருவாயூரப்பன் கோவில். இக்கோவிலின் 10ம் ஆண்டு பிரம்மோத்சவம் கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 5ம் தேதி கருட வாகன புறப்பாடு நடந்தது. பிரம்மோத்சவத்தின் பிரதான நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இதை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில், உற்சவர் குருவாயூரப்பன் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க மாடவீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று புஷ்ப பல்லக்கு புறப்பாடு நடக்கிறது. நாளை முதல் 14ம் தேதி வரை விடையாற்றி உத்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, குருவா யூரப்பன் ஆஸ்திக ஸமாஜத்தினர் செய்துள்ளனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !