உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்க்க சகாயர் வழித்துணைநாதர் கோவில் கும்பாபிஷேகம்

மார்க்க சகாயர் வழித்துணைநாதர் கோவில் கும்பாபிஷேகம்

சேத்தியாத்தோப்பு: மார்க்க சகாயர் வழித்துணைநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மரகதவள்ளி சமேத மார்க்க சகாயர் வழித்துணைநாதர் கோவில் திருப்பணிகள் கடந்தாண்டு துவங்கி கடந்த, 10 நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. கடந்த, 10 ம் தேதி காலை, 6:00 மணியளவில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்டவைகள் நடந்தன.

அடுத்தடுத்த தினங்களில், பல்வேறு வழிபாடுகளை தொடர்ந்து, நேற்று காலை 6:00 மணிக்கு மங்கள இசை, வேதபாராயணம், விசேஷ சாந்தி, நான்காம் கால யாக ஹோமம், காலை 8:00 மணிக்கு தனபூஜை, கோ பூஜை, 10:00 மணிக்கு, தீபாராதனையுடன் கடம்புறப்பாடாகி, 10:15 மணிக்கு விமான கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

காலை 10:35 மணிக்கு மூலவர் மார்க்க சகாயர், மரகதவள்ளி அம்மன், பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன், நவக்கிரகங்கள், பைரவர், சூரியனாருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

அறநிலையத்துறை கடலுார் இணை இயக்குனர் ஜோதி, துணை இயக்குனர் சிவக்குமார், செயல் அலுவலர்கள் ராஜாசரவணன், ஜெயஸ்ரீ, ஆய்வாளர் சுபாஷினி உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஒரத்துார் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !