உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்துார்: காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்துார்: காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் தெற்கு ரத வீதி, மேலரத வீதி சந்திப்பு காளியம்மன் கோயிலில் மூலவர் விமானம், ராஜகோபுரம், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நேற்று காலை கோலாகலமாக நடந்தது.

இதனை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு மங்கல இசை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம்,மூர்த்தி ரக்ஷாபந்தனம், நான்காம் கால பூஜை, மகாபூர்ணாஹூதி, கும்பம் எழுந்தருளல் நடந்தது. பின்னர் காலை 10:30 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானமும், இரவு 7:00 மணிக்கு மேல் அம்மன் வீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள், திருப்பணி கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !