அனைத்து உயிர்கள் மீதும் இரக்கம் காட்டு: பாரதியார்
* உயிர்கள் மீது இரக்கப்படு. அதுவே சிறந்த தர்மம்.
* நம்பிக்கை காமதேனு போன்றது. கேட்ட வரம் அனைத்தும் கிடைக்கும்.
* பிறர் மீது அன்பு காட்டினால் மகிழ்ச்சி உன் மனதில் பெருகும்.
* மனதில் உண்மை அன்பு இருந்தால், யார் மீதும் கோபம் வராது.
* கோபப்படாதே. மீறினால் உனக்கு நீயே தீங்கு செய்கிறாய்.
* மலர்ந்த முகமும், இனிய சொல்லும் தான் இன்பமாக வாழும் வழி.
* மனதில் உண்மை இருந்தால், பேச்சிலும் அதன் தன்மை வெளிப்படும்.
* பயம் இருக்கும் வரையில் மனிதன் அறிவாளியாக முடியாது.
* மற்றவர் உள்ளத்தில் பொய் மதிப்பு உண்டாக இடம் கொடுக்காதே.
* கல்வி, தவத்தில் எந்த வயதில் வேண்டுமானாலும் ஈடுபடலாம்.
* குழந்தைக்கு கல்வி அளிப்பதோடு விளையாட்டையும் கற்றுக்கொடு.
* கஷ்டப்படும் குழந்தையை படிக்க வை. அது உனக்கு புண்ணியத்தை தரும்.
* பிறரது துன்பத்தைத் தீர்க்கும் வகையில் ஆறுதலாக பேசு.
* உதவி செய்ய எவ்வளவு பேர் இருந்தாலும் சுயபுத்தி இருப்பது அவசியம்.
* ஆணும் பெண்ணும் குடும்பமாக இணைந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை.
* இன்று புதிதாய் பிறந்தோம் என எண்ணினால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.