திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை வழிபாடு
ADDED :1 days ago
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், அமாவாசை சிறப்பு பூஜைகள் நடந்தன.
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், தோணியாற்றின் கரையில், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், அமாவாசை தினமான நேற்று, சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, மும்மூர்த்திகளை வழிபட்டனர். மேலும், தோணியாற்றின் கரையில், பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.