உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் 17ம் தேதி 1,008 தாமரைப்பூ அர்ச்சனை

ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் 17ம் தேதி 1,008 தாமரைப்பூ அர்ச்சனை

சிவாஜி நகர்: ஆடி மாதம் முதல் நாளன்று, வரும் 17ம் தேதி ஸ்ரீ காசி விசாலாட்சிக்கு, 1,008 தாமரை மலர்களால் அர்ச்சனை நடத்தப்படுகிறது.

தமிழ் ஆடி மாதம் பிறப்பை ஒட்டி, பெங்களூரு சிவாஜி நகர் திம்மையா சாலையில் உள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் வரும் 17ம் தேதி, ஸ்ரீ காசி விசாலாட்சி அம்பாளுக்கு, காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை 1,008 தாமரை பூக்கள், மூல மந்திரத்துடன் சஹஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது.

அதை தொடர்ந்து மஹா மங்களாரத்திக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஆடி முதல் நாளான நாளைய தினம் தட்சிணாயன புண்ணியகாலம் து வங்குகிறது. இந்நாளில், விசாலாட்சிக்கு, லட்சுமியின் அம்சமான தாமரை மலர்களால் அர்ச்சனை செய்யப்படுவதால், தனம், தானியம், புகழ் என 16 பெருமையும் கிடைக்கும் என்று பக்தர்கள் கருதுகின்றனர். மேலும், இந்த சிறப்பு அர்ச்சனை, வாராஹி நவராத்திரி கால கட்டத்தில் வருவதால், மிகவும் சிறப்பாக கரு தப்படுகிறது.

இப்பூஜையில் பக்தர்கள் பங்கேற்கும்படி, கோவில் நிர்வாகத்தினரான ஆர்.பி.வி.ஜி.சி.சி., எனும் ராய்பகதுார் வி.கோவிந்த செட்டியார் அறக்கட்டளை நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !