உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்

திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று, ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் ஸ்ரீதன்வந்திரி பெருமாளாக அருள்பாலித்தார்.

அதையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம்; 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, 9:30 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடாகி திருகண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடை திறப்பு, மாலை 6:00 மணிக்கு நித்யபடிபூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.

பக்தர்கள் அனைவருக்கும் தன்வந்திரி மகா பிரசாதமாக பலவகை மூலிகைகள் கொண்டு தயாரித்த லேகியம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !