ராஜகீழ்பாக்கத்தில் காஞ்சி மகா பெரியவர் அருங்காட்சியகம் மற்றும் கண்காட்சி; வரலாற்றை தெரிந்து கொள்ள வாய்ப்பு
சென்னை; சென்னை, கிழக்கு தாம்பரம், ராஜகீழ்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி அருங்காட்சியகம், காஞ்சி மகாபெரியவர் என்று அன்போடு அழைக்கப்படும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு மற்றும் தத்துவங்களை விளக்கும் ஒரு டிஜிட்டல் மியூசியம் ஆகும். இது அனுக்கிரக வர்ஷா (Anugraha Varsha) என்றும் அழைக்கப்படுகிறது.
தாம்பரம் அடுத்த ராஜ கீழ்பாக்கத்தில் உள்ள காஞ்சி மஹா ஸ்வாமி வித்யா மந்திரில், சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின்படி ஒரு வித்யா சாலையும், ஒரு வேத பாட சாலையும் செயல்பட்டு வருகிறது. பாடசாலையில் சேர்க்கப்படும் மாணவர்கள் பள்ளி கல்வியும் கற்று வருகின்றனர். இந்த வளாகத்தில் கணபதி கோவில், காமாட்சி அம்மன் கோவில், சிவன் கோவில் ஆகியவை நிறுவப்பட்டு, தினமும் பூஜைகள் நடக்கின்றன. இங்கு மகா பெரியவரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் காஞ்சி கோஷ் (அனுக்ரஹ வர்ஷம்) அருங்காட்சியகம் மற்றும் கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 2500 ஆண்டுகாலப் பெருமைமிக்க வரலாற்றை எடுத்துரைக்கும் இந்தத் தனித்துவமான அருங்காட்சியகத்தை மாலை 4:30 மணி முதல் 7:30 மணி வரை கண்டு மகிழலாம்.