உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் பெரியகோயிலில் ஆஷாட நவராத்திரி; மஞ்சள் அலங்காரத்தில் மகா வாராஹி அம்மன்

தஞ்சாவூர் பெரியகோயிலில் ஆஷாட நவராத்திரி; மஞ்சள் அலங்காரத்தில் மகா வாராஹி அம்மன்

தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு மஞ்சள் அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தஞ்சாவூர் பெரியகோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனாகிய  ஸ்ரீபெருவுடையார் ஆலயத்தில்  தனி சன்னதியில் உள்ள ஸ்ரீமஹா வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் உள்ள ஸ்ரீமஹாவாராகி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும், வேறெங்கும் நடைபெறுவது இல்லை, இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் நேற்று தொடங்கியது,10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் முதல் நாள் அன்று இனிப்பு  அலங்காரம் நடைபெற்றது, இதையடுத்து 2வது நாளாக நேற்று (14.7.26) வாராஹி அம்மனுக்கு மஞ்சள் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது, மேலும் அதனைத்தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் வாராஹி அம்மனுக்கு பல்வேறு அலங்காரங்கள் காட்சி படுத்தப்பட்டிருந்தன, மேலும் நந்தி மண்டபத்தில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன, இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாராஹி அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !