சக்தி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் பக்தர்கள் பரவசம்
ADDED :11 hours ago
அன்னூர்: கரியாம்பாளையத்தில் பழமையான சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பல லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
கும்பாபிஷேக விழா கடந்த 14ம் தேதி திருவிளக்கு வழிபாடுடன் துவங்கியது. மாலையில் முதற்கால வேள்வி பூஜை நடந்தது.
நேற்று (15ம் தேதி) காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், விமான கலசங்கள் நிறுவுதலும், மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜையும், எண் வகை மருந்து சாத்துதலும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று (16ம் தேதி) காலை 8:30 மணிக்கு, விமானங்களுக்கும், இதையடுத்து, சக்தி மாரியம்மன், விநாயகர் மற்றும் பாலமுருகனுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள் அருளுரை வழங்குகினர்.